சூடான செய்திகள் 1

தேர்தலை விரைவாக நடத்த தீர்மானம்

(UTV|COLOMBO)-எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்காக சட்ட வரைவு ஒன்றை தயாரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

25 வீத பெண்களின் பிரதிநிதித்துவத்துடன் பழைய முறையில் தேர்தலை நடத்துவதற்காக அமைச்சரவை அனுமதி வழங்கியதாக அமைச்சரவை பேச்சாளர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டிய தேவையுள்ளதாகவும், ஆகவே இவ்வாறானதொரு சட்ட வரைவை உருவாக்கி தேர்தலை நடத்த தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மாகாண சபை, உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் சமர்பிக்கப்பட்ட பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியதாக மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

 

 

 

Related posts

பிரசார நடவடிக்கைகள் யாவும் இன்று நள்ளிரவுடன் நிறைவு

கலைக்கப்பட்டுள்ள பாராளுமன்றத்தை கூட்ட முடியாது

கொழும்பு தவிர்ந்த சில மாவட்டங்களுக்கு ஊரடங்குச் சட்டம் நீக்கம்