உள்நாடுசூடான செய்திகள் 1

தேர்தலை நடத்துவது தொடர்பில் தேசப்பிரிய கருத்து

(UTV | கொழும்பு) -தேர்தலை நடத்துவது குறித்து சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாட வேண்டியது அவசியம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இன்று காலை தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட  செவ்வியில் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், பாராளுமன்ற தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு கூடி தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும்  எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொதுத் தேர்தலை திகதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதற்கான இயலுமை இல்லை எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

Related posts

மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான மனு டிசம்பர் 03ம் திகதிக்கு ஒத்திவைப்பு

பதியதலாவ பிரதேச சபை தவிசாளர் கைது

ஊழலில் ஈடுபடும் சிறைச்சாலை அதிகாரிகளை மடக்கும் வேலைகள் ஆரம்பம்..