சூடான செய்திகள் 1

தேயிலை தொழிலாளர்களது பிரச்சினைகள் தொடர்பில் ஆராய ஜனாதிபதியினால் குழு நியமனம்

(UTV|COLOMBO) பெருந்தோட்ட தொழிலாளர்களான தேயிலை தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டுள்ள மக்களின் பிரச்சினைகள் மற்றும் சம்பள சிக்கல்களை தீர்க்கும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் குழு ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சினைகளுக்கு குறுகிய கால மற்றும் நீண்ட கால அடிப்படையிலான தீர்வுத் திட்டங்களை வழங்கும் நோக்கில் குறித்த குழு நிறுவப்பட்டுள்ளது.

தேயிலை தொழிற்துறையில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பில் நேற்று(13) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற விசேட சந்திப்பில் குறித்த இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலணியின் பிரதானி எம்.ஜீ. ஹிடிசேகர, பெருந்தோட்டத்துறை அமைச்சின் செயலாளர் ஜே.ஏ. ரஞ்சித், தொழில் அமைச்சின் செயலாளர் ஆர்.பீ.ஆர். ராஜபக்ஷ, திறைசேரியின் பணிப்பாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ் சமரதுங்க, தேயிலை சபையின் தலைவர் டபிள்யூ.எல்.பி. விஜேவர்தன, தொழில் ஆணையாளர் நாயகம் ஜே.விமலவீர ஆகிய சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி சங்கத்தின் தலைவர், பெருந்தோட்டத் தொழிலாளர் சங்கம், தேயிலை உற்பத்திசாலை உரிமையாளர் சங்கம், தேயிலை ஏற்றுமதி சபை உள்ளிட்டவர்களின் பிரதிநிதிகள் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

எதிர்வரும் ஒரு மாத காலத்திற்கு ஆராய்ந்து தீர்வுத் திட்டங்கள் முன்வைக்கப்பட உள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

 

Related posts

பிரதமர் நோர்வே நோக்கி பயணமானார்…

அல்லாஹ் என்ற எழுத்துடன் சந்தைக்கு வந்த குர்பானி ஆடு; இத்தனை விலைக்கு விற்பனையா?

டிசம்பர் வரை எரிபொருள் ​விலை அதிகரிக்கப்படும்