கிசு கிசு

தேம்பி, தேம்பி அழுத இளம் பெண்-காரணம் இதுவா?

(UTV|CHINA) சீனாவில் ‘அவெஞ்சர்ஸ்’ படம் பார்த்து தேம்பி, தேம்பி அழுத இளம் பெண்ணுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சூப்பர் ஹீரோக்களை ஒன்றிணைக்கும் ‘அவெஞ்சர்ஸ்’ திரைப்படங்களுக்கு உலகம் முழுவதும் பெருந்திரளான ரசிகர்கள் உள்ளனர். இந்த படத்தின் கடைசி பாகமான ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ திரைப்படம் அண்மையில் உலகம் முழுவதும் வெளியாகி வசூலை வாரிக்குவித்து வருகிறது.

நிலையில், சீனாவின் நிங்போ நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவி சியாலி (வயது 21) இந்த திரைப்படத்தை அங்குள்ள ஒரு திரையரங்கில் பார்த்து கொண்டிருந்தார். படத்தின் உணர்வுப்பூர்வமான காட்சிகளைக் கண்டு கண் கலங்கிய அவர், நேரம் செல்லச் செல்ல தேம்பி, தேம்பி அழுதார்.

அதனால் ஒரு கட்டத்தில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கினார். இதையடுத்து, செயற்கை சுவாச உதவியோடு அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் அதிகமாக அழுததால் நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கியதாக தெரிவித்தனர். மருத்துவமனையில் அந்தப் பெண்ணுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

 

 

 

Related posts

சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை?

பாராளுமன்றத்தை கலைப்பது இப்போதைக்கு இல்லை

டி-20 தொடரில் இருந்து மெத்தியூஸ் நீக்கம் – லசித் விளையாடுவாரா?