உள்நாடு

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் இராஜினாமா

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் என்.பி.எம். ரணதுங்க ராஜினாமா செய்துள்ளார்.

ராஜினாமா கடிதம் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அவரது அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த ஒக்டோபர் 10 ஆம் திகதி குறித்த பதவிக்கு இவர் நியமிக்கப்பட்டிருந்தார்.

அதன்படி, அவர் அந்தப் பதவியில் 3 மாதங்கள் மட்டுமே பணியாற்றி வந்த நிலையில், தனது ராஜினாமாவுக்கான காரணங்களை விளக்கி ஒரு நீண்ட கடிதத்தை எழுதியிருந்தார்.

இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமால் சிறிவர்தன தனது பதவியை ராஜினாமா செய்ததாக கடந்த 29 ஆம் திகதி தெரிவிக்கப்பட்டது.

மேலும், தேசிய தொலைக்காட்சியின் தலைவராக நியமிக்கப்பட்ட கலாநிதி செனேஷ் திசாநாயக்க பண்டாரவும் சமீபத்தில் பதவி விலகியமை குறிப்பிடத்தக்கது.

Related posts

உயர்தரப் பரீட்சை வெட்டுப்புள்ளி இன்று வெளியீடு

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

அர்சுணா பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றம்