இலங்கை டெலிகொம் மொபிடெல் நிறுவனத்துடன் இணைந்ததான ’ரேன்போ பேஜஸ்’ நிறுவனத்தின் ஊடாக வருடாந்தம் அச்சிடப்படும் தேசிய வர்த்தக கோப்பகத்தின் (National Business Directory) முதல் பிரதி ஜனவரி 30ஆம் திகதி பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவிடம் இசுருபாய கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வியமைச்சில் வைத்து கையளிக்கப்பட்டது.
’ரேன்போ பேஜஸ்’ நிறுவனத்தினால் வாடிக்கையாளர் மற்றும் வர்த்தக சமூகத்தை ஒன்றிணைக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் புதிய இணைய பக்கத்தின் தயாரிப்பு சேவை போன்ற வேறு டிஜிட்டல் சேவைகள் ஊடாக இந்த நாட்டின் புதிய வர்த்தக சமூகத்திற்கென முன்னெடுக்கப்படும் சேவையை பிரதமர் இதன்போது பாராட்டினார்.
தேசிய வர்த்தக கோப்பகத்தின் இணையத்தள பக்கமான www.rainbowpages.lk என்ற இணையத்தளம் தொடர்பிலும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இந்த நிகழ்வில் ரேன்போ பேஜஸ் நிறுவனத்தின் பிரதம அதிகாரி உபுல் மஞ்சநாயக்க உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
-பிரதமர் ஊடக பிரிவு