அரசியல்உள்நாடு

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் அலுவலகத்தின் மீது தாக்குதல்

கண்டி கட்டுகஸ்தோட்டை உகுரஸ்ஸபிட்டிய பிரதேசத்தில்  அமைக்கப்பட்டிருந்த தேசிய மக்கள் சக்தியின்  ஜனாதிபதி தேர்தல் அலுவலகத்தை  தாக்கப்பட்டு அதன் கதவு உடைக்கப்பட்டுள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்று (07) திறப்பதற்கு தயார் நிலையிலிருந்த தேசிய மக்கள் சக்தியின் இந்த அலுவலகத்தை நேற்று அதிகாலை இனந்தெரியாத குழுவொன்று தாக்கி அதன் கதவுகளை உடைத்துள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கட்டுகஸ்தோட்டை பொலிஸார்  இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளார்.

Related posts

எதிர்காலத்தில் எரிபொருள் விலை குறைக்கப்படும்

டெங்கு நோய் பரவும் அபாயம்

சிறை கைதிகள் 1,460 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை