சூடான செய்திகள் 1

தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரம் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் ரிஷாட் பதியுதீன்..

(UTV|COLOMBO)-தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை பிரகடனப்படுத்தும் நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நேற்று(21) முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்த மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சருமான ரிஷாட் பதியுதீனும் கலந்து கொண்டார்.

இந் நிகழ்வில் அமைச்சர்களாகிய தயா கமகே, வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, அங்கஜன் இராமநாதன், காதர் மஸ்தான் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் மாவட்ட செயலாளர்கள், மாகாண செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளும், இராணுவ மற்றும் கடற்படை தளபதிகள், பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்புத்துறை பிரதானிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

 

 

 

Related posts

இலவச பாடகு சேவை தயார்; ஒரு மாதத்திற்கு மட்டுமே

30 ஆம் திகதி விசேட விடுமுறை தொடர்பில் மத்திய வங்கி ஆளுநரின் விசேட அறிவித்தல்!

தீர்வு கிடைக்காவிட்டால் போராட்டம் தொடரும்