சூடான செய்திகள் 1

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்களை நியமிக்க அரசியலமைப்பு சபை கூடுகிறது

(UTV|COLOMBO)-கடந்த 14ம் திகதியுடன் பதவிக் காலம் நிறைவுறும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்களை நியமிக்க அரசியலமைப்பு சபையானது இவ்வரத்தினுள் கூடவுள்ள நிலையில், அது குறித்த திகதி இன்று(22) சபாநாயகர் கரு ஜயசூரியவினால் அறியப்படுத்தப்படும் என சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், 19வது அரசியலைப்பு திருத்தத்திற்கு அமைய புதிய அதிகாரிகள் குழு நியமிக்கும் வரையில் இந்நாள் அதிகாரிகள் குழுவிற்கு ஆணைக்குழுவின் நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வது தொடர்பில் ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூருய எதிர்வரும் 27ம் திகதி மொங்கோலியாவுக்கு உத்தியோகபூர்வ சுற்றுப் பயணத்தினை மேற்கொள்ளவுள்ளதோடு, அதற்கு முன்பதாக பொலிஸ் ஆணைக்குழுவின் உறுப்பினர்களை நியமிக்க குறித்த அரசியலமைப்பு சபையினை கூட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

ஆதரவு வழங்குவது தொடர்பில் தீர்மானிக்கவில்லை – ரிஷாட் பதியுதீன்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் வைத்திய பீடம் எதிர்வரும் 17ம் திகதி ஆரம்பம்

தொழிற்சங்க போராட்டம் கைவிடப்பட்டது