சூடான செய்திகள் 1

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பணிகள் தொடரும்

(UTV|COLOMBO)-தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பதவிக்காலம் நேற்றுடன்(14) நிறைவடைகின்றது.

இந்தநிலையில், புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படும் வரை, தற்போதுள்ள உறுப்பினர்கள் தமது பதவிகளில் கடமையாற்றவுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

2015 ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி முதல் தேசிய பொலிஸ் ஆணைக்குழு செயற்பட்டு வருவதுடன், அதன் தலைவராக பி.எம். மனதுங்க கடமையாற்றி வருகின்றார்.

எனினும், 19 ஆவது திருத்தத்தின் பிரகாரம் புதிய உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படும் வரை தற்போதுள்ள உறுப்பினர்கள் பதவியில் நீடிப்பதாக செயலாளர் சமன் திசாநாயக்க குறிப்பிட்டார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

நிதி அமைச்சின் ஊடக பணிப்பாளர் கைது

இன்றும் கடல் கொந்தளிப்பு

பாராளுமன்ற மிளகாய்த்தூள் தாக்குதலுக்கு எதிராக முறைப்பாடு