வணிகம்

தேசிய பால் உற்பத்தியை அதிகரிக்க திட்டம்

(UTV | கொழும்பு) – நாட்டில் தேசிய பால் உற்பத்தியை 70 வீதம் வரை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக, அரசு தெரிவித்துள்ளது.

நாட்டின் மொத்த பால் தேவையில் 40 வீதம் உள்ளூர் பால் உற்பத்தியாளர்களின் மூலமும், மிகுதி 60 வீதம் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் மூலமும் பூர்த்தி செய்யப்படுகிறது.

இந்நிலையில், உள்ளூர் பால் உற்பத்தியாளர்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் பசும்பாலின் அளவை 70 வீதம் வரை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக, உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்வனவு செய்யப்படும் பாலை சேமித்து வைப்பதற்கான வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த திட்டத்தின் மூலம், உள்ளூர் பால் உற்பத்தியாளர்களின் இலாபமும் அதிகரிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

தேயிலையில் கலப்படமா?…..

Oracle Cloud அப்ளிகேஷன் ஊடாக MillenniumIT ESP க்கு வலுவூட்டல்

எயார்டெல் வழங்கும் வரையறையற்ற அழைப்புகள்