உள்நாடு

தேசிய பாதுகாப்பு முக்கியமானது

(UTV | கொழும்பு) – தேசிய பாதுகாப்பினை கருத்திற்கொள்ளாமல் ஒரு நாட்டை முன்னேற்றுவதும் அபிவிருத்தி செய்வதும் சாத்தியமற்றது என பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

நாட்டிற்கு தேவையான நேரடி முதலீட்டை ஈர்ப்பதில் தேசிய பாதுகாப்பின் அவசியத்தை இதன்போது பாதுகாப்பு செயலாளர் வலியுறித்தினார்.

தேசிய பாதுகப்பை நிலைநிறுத்துவதே நாட்டின் அபிவிருத்தி இலக்கை நோக்கிய திசையாகும் என தெரிவித்த அவர், ‘வழமான எதிர்காலம்’ எனும் ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை இதன் போது சுட்டிக்காட்டினார். “கொவிட் -19 க்கு பின்னரான மறுமலர்ச்சி – இலங்கையின் தற்போதைய மற்றும் எதிர்கால வளர்ச்சி” எனும் தொனிப்பொருளில் “ஹரிமக அமைப்பினால்” இலங்கை மன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

2019 ஆம் ஆண்டில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த பாதுகாப்பு செயலாளர், இத்தாக்குதல்கள் குறித்து புலனாய்வு அமைப்புகளுக்கு 97 முறை முன்கூட்டியே எச்சரிக்கைகள் கிடைத்தபோதும், பொறுப்பானவர்கள் அதன் பாரதூரமான விளைவுகள் தொடர்பில் கவனம் செலுத்தவில்லை இதனால் சுமார் 290 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளைத் தடுக்கவும் சுமார் 500 பேர் காயமடைவதை தடுக்கவும் தவறிவிட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

“எமது இராணுவ புலனாய்வு அதிகாரிகள் சிறையில் அடைக்கப்பட்டமை மற்றும் புலனாய்வுத்துறையில் உள்ளோர் வெளியேறியமை என்பன தீவிரவாதிகள் சுதந்திரமாகவும் கட்டமைப்பாகவும் செயற்படுவதற்கு வழியமைத்ததாக அவர் குறிப்பிட்டார்.

“கடந்த வாரம் கூட, நாம், 1.5 கிலோகிராம் உயர் ரக வெடிபொருட்கள் மற்றும் 90 டெட்டனேட்டர்களை மன்னார் பிரதேசத்திலிருந்து கைப்பற்றியுள்ளோம். அத்தோடு, ஒரு சில தொலை கட்டுப்பாட்டு கருவிகளும் (ரிமோட் கொன்ட்ரோலர்கள்) எம்மால் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த சம்பவம் தொடர்பில் நாம் பராமுகமாக செயற்பட்டிருந்தால் இவைகளை எம்மால் மீட்டிருக்க முடியாது என அவர் தெரிவித்தார்.

வடக்கில் பிரிவினைவாதமோ கிழக்கில் தீவிரவாதமோ நாட்டில் அச்சத்தையும் அழிவையும் ஏற்படுத்துவதற்கு நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என மேஜர் ஜெனரல் குணரத்ன வலியுறுத்தினார்.

Related posts

இன்றும் சுழற்சி முறையில் 3 மணி நேர மின்வெட்டு

மே 06 : நாட்டுக்காக ஒரு நாள், ஹர்த்தால் அமைப்பின் வேண்டுகோள்

மொத்த வியாபாரிகளுக்காக பேலியகொடை மீன் சந்தை திறப்பு