கிசு கிசு

தேசிய பட்டியல் ஊடாக ரணிலுக்கு வாய்ப்பு?

(UTV | கொழும்பு) – ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைத்துள்ள ஒரே ஒரு தேசிய பட்டியல் உறுப்பினர் பதவிக்காக அந்த கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை பெயரிடவுள்ளதாக கட்சியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்ட எந்தவொரு உறுப்பினரும் வெற்றி பெறவில்லை. எனினும் பெற்றுக்கொண்ட வாக்கின் அடிப்படையில் ஒரு தேசியப்பட்டியல் உறுப்பினர் அக்கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.

அந்தப் பதவிக்காக கட்சிக்குள் உள்ளக மோதல் ஏற்படுவதனை தடுப்பதற்காக கட்சியின் தலைவருக்கு அந்த பதவியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

இதேவேளை, பொதுத் தேர்தலில் ஏற்பட்டுள்ள பாரிய தோல்விக்கான காரணத்தை கண்டறிவதற்கு கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவினால் 5 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

Gmail மற்றும் Google drive ல் சிக்கல்…

சினோஃபார்ம் தடுப்பூசி பெற்ற இலங்கையர்களுக்கு பிரான்ஸ் தடை

சிக்கித் தவிக்கும் விக்கி