உள்நாடு

தேசிய பட்டியல் உறுப்பினர்களின் பெயர்களை வழங்குமாறு கோரிக்கை

(UTV | கொழும்பு) – தேசிய பட்டியல் உறுப்பினர்களின் பெயர் விபரங்களை இதுவரை வெளியிடாத அரசியல் கட்சிகள் நாளைய தினத்திற்குள் அதனை சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளையும் தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பில் தேசியப் பட்டியலில் தெரிவு செய்யப்பட்டுள்ள 17 உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் 7 பேரின் பெயர்கள் பரிந்துரை தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த பெயர் விபரங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சத் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

இதனிடையே தேசிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் உறுப்பினராக பேராசிரியர் ஹரினி அமரசூரிய பெயரிடப்பட்டுள்ளார்.

இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் ஒருவரை தெரிவு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ள போதிலும் இதுவரை எவ்வித தீர்மானங்களும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

தங்காலையில் 330 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 94 பேர் கைது

பிரதமர் மஹிந்த தாயகம் திரும்பினார்