விளையாட்டு

தேசிய படகுப்போட்டி இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO)-தேசிய படகு ஓட்டப்போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.

33 வது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த போட்டி ராஜகிரிய தியவன்னாவ அருகாமையிலுள்ள தியவன்னா படகு ஓட்ட விளையாட்டு மத்திய நிலையத்தை கேந்திரமாக கொண்டு நடைபெறவுள்ளது.

 

இலங்கை படகு ஓட்ட சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த போட்டி 22 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் ஒவ்வொரு வருட இறுதியிலும் நடாத்தப்பட்டு வந்த இப்போட்டியை ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இப்போட்டியில் 18 வயதிற்குட்பட்ட ,18 வயதிற்கு மேற்பட்ட மற்றும் பகிரங்க கனிஷ்ட போட்டிகளும் நடைபெறவுள்ளன. இதன்மூலம் வெளிநாடுகளில் நடைபெறவுள்ள போட்டிகளுக்கு பங்குபற்றும் வாய்ப்பினை பெற்றுக்கொள்ளமுடியும்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தினால் இரு வீரர்களுக்கு தடை

T20 WorldCup : சூப்பர் 12 சுற்று இன்று ஆரம்பம்

ஸ்மித், வோனர் இருவருக்கும் 1 வருட போட்டித்தடை