உள்நாடு

தேசிய தொலைக்காட்சி நேரலையில் நுழைந்த போராட்டக்காரர் நாட்டை விட்டு தப்பிக்க சென்ற போது கைது

(UTV | கொழும்பு) –  கட்டுநாயக்க பொலிஸ் பிரிவு அதிகாரிகளினால் நேற்று (26) மாலை கைது செய்யப்பட்ட சந்தேகநபரை தெளிவுபடுத்தும் வகையில் பொலிஸார் அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளனர்.

கடந்த 13 ஆம் திகதி தேசிய தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்திற்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று வன்முறையில் நுழைந்து அங்கு நேரலையில் தோன்றி அதன் ஒளிபரப்பு சிறிது காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டதையடுத்து, கோட்டை மற்றும் காலி முகத்திடலில் வன்முறைப் போராட்டங்களுக்கு வழிவகுத்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் இவர் என்பதை இது காட்டுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வெபட குருநாகல் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர்.

குறித்த சந்தேக நபர் தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளின் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நீங்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை நிச்சயம் பாதுகாப்போம் – அநுர

editor

பண்டிகை காலம் தொடர்பில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

தொற்றுக்குள்ளான மேலும் நான்கு கடற்படை வீரர்கள் வீட்டுக்கு