உள்நாடுவிளையாட்டு

தேசிய கிரிக்கெட் வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

(UTV | கொழும்பு) – கடந்த 7 ஆம் திகதி நடைபெற்ற இலங்கை கிரிக்கெட் நிர்வாகக் குழு கூட்டத்தில், ஓய்வு பெற்ற அல்லது தேசிய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற விரும்பும் வீரர்கள் தொடர்பில் சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, தேசிய கிரிக்கெட் அணியிலிருந்து வீரர்கள் ஓய்வு பெறுவதாயின், 3 மாதங்களுக்கு முன்னர் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு அறிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு கழகங்களுக்கான தொடர்களில் விளையாடுவதற்காக, “ஆட்சேபனை இல்லா சான்று’’ (NOCs) பெற விரும்பும் ஓய்வுபெற்ற தேசிய வீரர்களுக்கு, ஆறு மாத ஓய்வு திகதியை நிறைவு செய்திருந்தால் மாத்திரமே வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர் நடத்துவதற்கு முந்தைய பருவத்தில் நடத்தப்படும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் 80% போட்டிகளில் விளையாடியிருந்தால் மட்டுமே, ஓய்வுபெற்ற தேசிய வீரர்களுக்கு LPL போன்ற உள்ளூர் தொடர்களில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கபட்டுள்ளது.

மேற்படி தீர்மானங்கள் உடனடியாக அமுலுக்கு வரும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

Related posts

கொரோனா தொடர்பில் தவறான தகவல்களை பரப்பிய பல்கலைக்கழக நிர்வாகி ஒருவர் கைது

சுங்க திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கடமைகளை பொறுப்பேற்றார்

குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்றிய 6 பேருக்கு கொரோனா