உள்நாடு

தேசிய கல்வியியல் கல்லூரி புதிய மாணவர்களுக்கான அறிவித்தல்

(UTV | கொழும்பு)- 2018 ஆம் ஆண்டு வெளியான உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கமைவாக தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு இந்த வருடத்திற்காக மாணவர்களை உள்வாங்கும் செயற்பாடுகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று(04) வெளியாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவிக்கப்பட்டுள்ளது

குறித்த விண்ணப்பங்களை கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் ஒன்லைன் முறை மூலம் பூர்த்தி செய்து கொள்ள முடியுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த விண்ணப்பங்கள் எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பபட வேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன் இவ்விடயம் தொடர்பாக மேலதிக தகவல்களை 011 27 87 303, 011 27 87 385 மற்றும் 011 27 87 397 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ள முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

ஈரானிய எல்லைக்குள் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்!

ஜெனீவாவில் இம்முறை இந்தியாவும் ஆதரவு

அமைச்சர்கள் எரிபொருள் தேடி வெளிநாடுகளுக்கு