உள்நாடுசூடான செய்திகள் 1

கல்வியியல் கல்லூரிகளுக்கு நிரந்தர பீடாதிபதிகளை நியமிக்க தீர்மானம்

(UTV| கொழும்பு)- தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்காக நிரந்தர பீடாதிபதிகளை நியமிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

பல வருடங்களாக குறித்த தேசிய கல்வியியல் கல்லூரிகளில் பதில் பீடாதிபதிகளே பீடாதிபதிகளாக செயற்பட்டதாகவும், இதன்காரணமாக தேசிய கல்வியியல் கல்லூரிகளின் நிர்வாக நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் M.H.M. சித்ரானந்த தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தகுதிவாய்ந்தோருக்கு நாளை(13) நடைபெறவுள்ள நேர்முகத்தேர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், நேர்முகத்தேர்வில் சித்தியடைபவர்கள், பீடாதிபதிபதி, உப பீடாதிபதி மற்றும் ஏனைய பிரதான பதவிகளுக்கும் நியமிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related posts

அதிசொகுசு பஸ் விபத்தில் சிக்கியது – 1 மணிநேர போராட்டத்தின் பின் மீட்கப்பட்ட பயணிகள்

editor

ராணியின் மறைவுக்கு, உயர்ஸ்தானிகராலயத்தில் இரங்கல் புத்தகத்தில் ஜனாதிபதி கையெழுத்திட்டார்

இலங்கைக்கும்- ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குமிடையிலான இருதரப்பு வர்த்தக நிலைகள் வரலாற்று ரீதியில் உயர்ந்த மட்டத்தில்!