உள்நாடு

தேசிய ஒற்றுமையே காலத்தின் தேவை

(UTV | கொழும்பு) – வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு காலப்பகுதியில் இலங்கை தனது 73 வது சுதந்திர தினத்தை அடைந்திருக்கிறது.

தேசிய ஒற்றுமை பாரிய சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ள அதேவேளை, தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டு, இறையாண்மை வலுவிழந்து, பொருளாதாரம் பாதாளத்திற்க்கு தள்ளப்பட்ட முன் எப்போதும் இல்லாத ஒர் நெருக்கடி நிலை தற்போது ஏற்பட்டுள்ளது, இவற்றிற்க்கு மேலதிகமாக, தீர்வொன்றினை நோக்கிய எதிர்பார்ப்பிற்க்கு புறம்பாக, கொவிட்-19 நாட்டை தொடந்தும் காவுகொள்கிறது.

மேற்குறிப்பிட்ட நான்கு விடயங்களும் இந்த நாடு எதிர்கொள்ளும் எண்ணற்ற பல சவால்களுள் சிலவாகும், இவற்றை எதிர்கொண்டு வினைத்திறனாக முறியடிப்பது உண்மையிலேயே ஒர் இமாலய பணியாகும்.

முதலாவதாக, வேகமான தற்காலிக தீர்வு ஒன்று இல்லை என்பதை நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும், இது விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப்ப வளர்ச்சி மேம்பட்ட 21ம் நூற்றாண்டின் உலகாகும், அதற்கு அமைவாக எமது பிரச்சினைகளுக்கான தீர்வுகள் நடைமுறை சாத்தியமானதாகவும் நவீனமானதாகவும் இருக்க வேண்டும். மறுபுறம், இவ்வாறான யுகத்திலேயே வைரஸ் எனும் ஒர் மிகச்சிறிய நுண்ணங்கி முழு உலகையும் கட்டுப்படுத்தி சரணாகதி நிலையை அடைய செய்தது, யாருமே விதிவிலக்கில்லாத அளவிற்க்கு பரந்துபட்ட அழிவை ஏற்படுத்தி வருகிறது, இது புலன்களுக்கு அப்பாற்பட்ட ஒர் சக்தி உண்டு என்பதை நிச்சயமாக உறுதிப்படுத்துகிறது.

இந்த சிறிய நாடு நான்கரை நூற்றாண்டு கால வெளிநாட்டு ஆக்கிரமிப்பை எதிர்கொண்டது, பின்பு இரண்டு பாரிய கிளர்ச்சிகள், வெளி சக்திகளால் உந்தப்பட்ட தீவிரவாத பிரிவினைவாத இயக்கம் ஒன்றிற்கு எதிரான மூன்று தசாப்த கால உள்நாட்டு யுத்தம், கோரமிகு சுனாமி மற்றும் பல்வேறு அசம்பாவாவிதங்களையும் சவால்களையும் எதிர்கொண்டது.

தற்காலத்திலும் கூட புதிய பல சாவால்களை எதிர்கொள்ள முடியுமான சக்தி எம்மிடம் உண்டு என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும், இது இன, மத, சாதி வேற்றுமைகளுக்கு அப்பால் இலங்கையராக ஒன்றிணைவதன் மூலம் ஏற்படும் ஒர் பலமாகும்.

இலங்கை மக்களிடம் இவ்வாறான சமகால சவால்களை எதிர்கொள்ளும் பலம், உறுதி மற்றும் எதிர்வினை ஆற்றல் என்பவை உண்டு என தேசிய சூரா சபை திடமாக நம்புகிறது.

நாங்கள் ஆத்மார்த்தமாகவும் சிந்தையாலும் ஒண்றிணைந்து இலங்கை தாயின் உண்மையான பிள்ளைகாளாக முன்னோக்கி செல்வதன் மூலமே இது சாத்தியப்படும்.

பேதங்களை மறந்து, தேசிய ஒருமைப்பாட்டை கட்டமைக்க எல்லோரையும் முன்னோக்கி நகர்த்துவது தற்போது தலைவர்களது தலையாய கடமையாகும், இதுவே ஒரே தீர்வும் தேவையுமாகும்.

இவ்வாறான ஒர் நிலையை நம் தாய்நாடு அடையவேண்டும், மேலும் சிறப்பாக நிலைபேறாக, பிரகாசமாக 74வது சுதந்திர தினத்தில் நாம் கால்பதிக்க வேண்டும் எனவும், அதற்காக தேசிய சூரா சபை தனது முழு ஒத்துழைப்பையும் வழங்கும் எனவும் உறுதியளிக்கின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சிறைக் கைதிகளின் உண்ணாவிரத போராட்டம் நிறைவு

முரல் மீன் குத்தியதில் 29 வயதான மீனவர் உயிரிழப்பு.

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் 124 பேர் கைது!-03 லட்சத்துக்கும் மேல் அபராதம்