உள்நாடு

தேசிய எரிபொருள் உரிமம் : பல வாகனங்களைக் கொண்ட நிறுவனங்களுக்கான அறிவிப்பு

(UTV | கொழும்பு) –   பல வாகனங்களைப் பயன்படுத்தும் வணிகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தேசிய எரிபொருள் உரிமம் வழங்கும் முறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த அனைத்து வாகனங்களையும் குறித்த நிறுவனத்தின் வணிகப் பதிவு இலக்கத்தின் கீழ் பதிவு செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டார்.

உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் ஒவ்வொரு வாகனத்திற்கும் தனியான QR குறியீடு வழங்கப்படும் என காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

Related posts

படைப் புழுவை கட்டுப்படுத்த கிருமிநாசினி அறிமுகம்

மெனிங் சந்தைக்கு மறு அறிவித்தல் வரையில் பூட்டு

சுகாதார அதிகாரிகள் விடுத்துள்ள வேண்டுகோள்