உள்நாடு

தேசிய அருங் காட்சியகத்தில் இலவச கண்காட்சி

(UTV | கொழும்பு) – தேசிய அருங் காட்சியகத்தில் இலவச கண்காட்சி

நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழாவையொட்டி தேசிய சுவடிகள் காப்பகத் திணைக்களம், மத்திய கலாசார நிதியம், தொல்பொருள் திணைக் களம் மற்றும் அருங்காட்சியகத் திணைக்களம் ஆகியவை இணைந்து கண்காட்சியொன்றை நடத்தத் திட்ட மிட்டுள்ளன.

பெப்ரவரி 4 ஆம் 5 ஆம் திகதிகளில் தேசிய அருங் காட்சியகத்தில் குறித்த கண்காட்சியை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கண்காட்சியில் அரிய பல விடயங்களை மக்களுக்கு கண்டுகொள்ள முடியுமென பௌத்த சமய அலுவல்கள் மற்றும் கலாசார அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதான பத்திரன தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தக் கண்காட்சியை பொதுமக்கள் இலவசமாக பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

உத்தியோகபூர்வ கையிருப்பு 05 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிப்பு!

தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தின் அறிவிப்பு

அசாத் சாலியால் அடிப்படை உரிமை மனுத் தாக்கல்