உள்நாடு

தேசிய அடையாள அட்டை தொடர்பான புதிய அறிவிப்பு

(UTV | கொழும்பு) –  பிறப்புச் சான்றிதழ் இன்றி தேசிய அடையாள அட்டையைப் பெற முடியாதவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் வேலைத்திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான சுற்றறிக்கை அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதன்படி, 40 வயதுக்கு மேற்பட்ட இலங்கைப் பிரஜைகள், கிராம உத்தியோகத்தர் பிரிவில் நிரந்தர வதிவிடத்தைக் கொண்டவர்கள், வாக்காளர் பதிவேட்டில் பதிவு செய்தவர்கள், பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால் இதுவரை தேசிய அடையாள அட்டையைப் பெறாதவர்கள் இதற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

MV X-Press Pearl : பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கான இழப்பீடு வழங்கல் இன்று

யுகதனவி மின்னுற்பத்தி மையம் : வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

புத்தளத்தில் 32,710 பேர் பாதிப்பு!