உள்நாடு

தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டுமென ஜனாதிபதி பணிப்பு

(UTV | கொழும்பு) –   ராணி இரண்டாம் எலிசபெத் நேற்று மதியம் காலமானார். பக்கிங்ஹாம் அரண்மனை நேற்று பிற்பகல் அறிவித்தது. அதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது இரங்கல் செய்தியை இங்கிலாந்து அரச குடும்பத்தினருக்கும் மக்களுக்கும் அனுப்பியுள்ளார்.

இதேவேளை, மகாராணியின் மறைவை முன்னிட்டு இன்று (09) முதல் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மகாராணியின் உடல் நாளை லண்டனுக்கு கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியப் பேரரசின் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த ராணி இவர். ராணி இறக்கும் போது அவருக்கு வயது 96. 26 வயதில், அவர் ஐக்கிய இராச்சியத்தின் கிரீடத்தை எடுத்து 70 ஆண்டுகள் பணியாற்றினார்.

Related posts

கட்டண அதிகரிப்பை கோரும் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்

எரிபொருள் நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் நிறுத்தம்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

editor