உள்நாடு

தேசபந்து தென்னக்கோனை தவிர ஏனையோரைக் கைது செய்ய வேண்டாம் என அறிவுறுத்தல்!

வெலிகம ஹோட்டல் ஒன்றின் முன்பாக நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக கொழும்பு குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி உட்பட 6 சந்தேக நபர்களை கைது செய்ய வேண்டாம் என்று சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வுத் துறைக்கு அறிவுறுத்தியுள்ளார்.

கொழும்பு குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரியும் ஆறு சந்தேக நபர்களும் தங்களைக் கைது செய்யக் கூடாது என்று கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனுவின்படி, சட்டமா அதிபரும் மனுதாரர்களின் வழக்கறிஞர்களும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒரு உடன்பாட்டை எட்டினர்.

முதற்கட்ட விசாரணைகள் முடியும் வரை அவர்களைக் கைது செய்வதில்லை என்று முடிவு செய்தனர்.r

இருப்பினும், முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்காக குற்றப் புலனாய்வுத் துறையின் ஆறு புலனாய்வுக் குழுக்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் தலைமையகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது.

Related posts

நாளை 4 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களுக்கு மேல் மின்வெட்டு

வெள்ள நீரை வடிந்தோட செய்வது தொடர்பாக இம்ரான் எம். பி மற்றும் பிரதேச சபை செயலாளர்களுக்கு இடையில் அவசர சந்திப்பு

editor

சில பகுதிகளில் முட்டை விலை குறைவடைந்துள்ளது

editor