உள்நாடு

தேசபந்து தென்னகோனை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு

நீதிமன்றிலிருந்து பிணைப்பெற்று செல்லும் போது நீதிமன்ற உத்தரவை மீறி சென்ற விதம் குறித்து எதிர்வரும் 25 ஆம் திகதி மாத்தறை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் அவரை நீதிமன்றத்திற்கு வெளியே அழைத்துச் செல்லப் பயன்படுத்திய காரின் உரிமையாளருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மாத்தறை நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி தேசபந்து தென்னகோன் பிணைப்பெற்று மாத்தறை நீதவான் நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியேறிய போது நீதிமன்ற உத்தரவுகளை மீறியுள்ளதாக சட்டமா அதிபர் இன்று (21) நீதிமன்றத்தில் மனு ஒன்றின் ஊடாக சமர்ப்பணங்களை முன்வைத்த நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Related posts

அம்பர் எச்சரிக்கை குறித்து வெளியான தகவல்

editor

பிரதமர் ஹரிணியை சந்தித்த மாலைதீவு வெளிவிவகார அமைச்சர்

editor

விசேட சோதனை நடவடிக்கையில் 1,120 பேர் கைது