வகைப்படுத்தப்படாத

தேசத்திற்கு துரோகமிழைப்பதற்காக நான் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படவில்லை – ஜனாதிபதி

(UTV|COLOMBO)-நாடு பிளவுபடாத அரசியல் தீர்வுடன் நாட்டை அபிவிருத்தியை நோக்கி இட்டுச்செல்வதுடன் சகல மக்களும் சமாதானம், ஒற்றுமை மற்றும் சகவாழ்வுடன் வாழ்வதனை உறுதிப்படுத்துவதே தனது நோக்கமாகும் என  ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்தார்.

சமஷ்டி அதிகாரத்தினையோ அல்லது நாடு பிளவுபடக்கூடிய அதிகாரங்களையோ வழங்க தான் தயாராக இல்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி , தான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டது தேசத்திற்கு துரோகமிழைப்பதற்காக அல்ல எனவும் வலியுறுத்தினார்.
சியோல் நகரிலுள்ள கிரான்ட் ஹைட் ஹோட்டலின் நம் சன் மண்டபத்தில் இன்று (28) பிற்பகல் இடம்பெற்ற தென்கொரியாவில் வாழும் இலங்கையர்களுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தென்கொரியாவில் தொழில் புரியும் உத்தியோகத்தர்கள், வர்த்தகர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றும் இலங்கையர்கள் பெருந்தொகையானோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி , இராணுவத்தினரையோ அல்லது தேசிய பாதுகாப்பினையோ பலவீனப்படுத்துவதற்காக தான் நாட்டை பொறுப்பேற்கவில்லை என்றும் சர்வதேசத்தினை வெற்றிகொள்வதற்கு காணப்பட்ட சவாலினையே தான் முதலாவதாக நிறைவேற்றியதாகவும் தெரிவித்தார்.
உலகின் பலம்மிக்க தேசங்களின் உதாசீனத்திற்கு ஆளாகியிருந்த நம்தேசம் மீண்டும் சர்வதேசத்தின் நன்மதிப்பினை பெற்றுக்கொள்ள கடந்த மூன்று வருட காலத்திற்குள் தன்னால் முடிந்துள்ளதெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி , எவர் எதனைக் கூறினாலும் தற்போது நாட்டிற்காக தான் முழு உலகையுமே வெற்றிகொண்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
சிறந்த வெளிநாட்டுக் கொள்கையினால் சர்வதேச யுத்தக் குற்ற விசாரணை, சர்வதேச நீதிபதிகள் பற்றிய சர்ச்சைகளை நிறைவுசெய்துள்ளதுடன், அதனை ஏற்றுக்கொள்ள விரும்பாத சிலர் தொடர்ந்தும் அது பற்றிய உரையாடல்களில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.
தற்போது நாட்டில் பல்வேறு அபிவிருத்தி செயற்திட்டங்கள் இடம்பெற்று வருவதுடன் சகல மக்களும் நல்லிணக்கத்துடன் வாழ்வதற்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
கொரிய ஜனாதிபதியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கோலாகல வரவேற்பினை இதன்போது குறிப்பிட்ட  ஜனாதிபதி , நாடுகளுக்கிடையிலான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும் சந்தர்ப்பங்களில் உத்தியோகபூர்வ வரவேற்பின்போதே அரச தலைவர்கள் சந்திப்பது வழக்கமாக இருந்தபோதிலும் தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜெயின் அந்த வழக்கத்திற்கு மாறாக உத்தியோகபூர்வ விஜயத்திற்கு முன்னரே தன்னை சிநேகபூர்வமாக சந்தித்து சுமார் ஒரு மணி நேரமளவில் தன்னுடன் உரையாடியமையானது, அவர் எமது நாட்டின் மீதும் மக்கள் மீதும் கொண்டுள்ள நன்மதிப்பினை எடுத்துக் காட்டுகின்றது எனத் தெரிவித்தார்.
2015 ஆம் ஆண்டில் பெற்றுக்கொண்ட மக்கள் ஆணையை நிறைவேற்றுவதில் காணப்படும் சவால்களையும் இடையூறுகளையும் எதிர்கொண்டு செயற்படுவதற்காக Nam San Hall Ground Hyatt இலங்கை சங்கம் ஜனாதிபதிக்கு இதன்போது பாராட்டுத் தெரிவித்ததுடன் தென்கொரியாவிலுள்ள இலங்கை தொழிலாளர்களுக்கு தொழில் அனுமதிப்பத்திர முறையொன்றினை அறிமுகப்படுத்துவதற்காக கைச்சாத்திடப்படவுள்ள உடன்படிக்கைத் தொடர்பாகவும் பாராட்டுத் தெரிவித்தனர்.
தென்கொரியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் புதிய இணையத்தளமும் இதன்போது ஜனாதிபதி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
அமைச்சர்களான கலாநிதி சரத் அமுனுகம, திலக் மாரப்பன, தயா கமகே, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, மலிக் சமரவிக்ரம, தலதா அத்துகோரல ஆகியோரும் தென்கொரியாவுக்கான இலங்கைத் தூதுவர் மனிஷா குணசேக்கர உள்ளிட்ட குழுவினர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

සරම්ප රෝගය තුරන් කළ සිව්වෙනි රට ශ්‍රී ලංකාවයි

தேர்தல் கண்காணிப்பிற்காக 7000 கண்காணிப்பாளர்கள் கடமையில்

எச்சரிக்கை: இலங்கை கணணிகளுக்கு சைபர் தாக்குதல்?