சூடான செய்திகள் 1

தேங்கிக் கிடக்கும் குப்பைகளை நாளைய(12) தினத்திற்குள் முழுமையாக அகற்ற நடவவடிக்கை

(UTVNEWS | COLOMBO)  – கொழும்பு நகரில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை நாளைய(12) தினத்திற்குள் முழுமையாக அகற்றக் கூடியதாக இருக்கும் என கொழும்பு மாநாகர சபையின் நகர ஆணையாளர் பாலித நாணயக்கார தெரிவித்திருந்தார்.

தற்போதுவரை கொழும்பில் தேங்கிக் கிடந்த சுமார் 250 டன்னுக்கும் அதிகளவான குப்பைகள் புத்தளம் அறுவக்காடு குப்பைக்கூள முகாமை மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

வத்தளை – கெரவலப்பிட்டியவில் உள்ள குப்பைகளை சேகரிக்கும் மையத்தின் கொள்ளளவு எல்லை கடந்ததை அடுத்து, அங்கு மேலும் குப்பைகளை சேகரிக்க முடியாது என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து. கடந்த சில நாட்களாக கொழும்பு உள்ளிட்ட பல இடங்களில் குப்பைகள் தேங்கியிருந்தன.

எவ்வாறிருப்பினும், அறுவக்காட்டில் குப்பைகளைக் கொட்டுவதற்கு எதிராக வனாத்தவில்லு பிரதேச நடவடிக்கை மேற்கொண்டிருந்த நிலையில், புத்தளம் அறுவக்காட்டில் குப்பைகளை கொட்டுவதற்கு கொழும்பு மாநகர சபைக்கு தடையின்றி இடமளிக்குமாறு வனாத்தவில்லு பிரதேச சபைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த குப்பைகளை அகற்றும் பணிகள் நேற்று முன்தினம்(09) முதல் ஆரம்பிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது

பிரதமர் நாடு திரும்பினார்…

பெண்ணின் கருப்பையை அகற்றுவது என்பது உணர்வுப்பூர்வமான விடயம் – சம்பிக ரணவக