உள்நாடு

தேங்காய் பறிக்க தோட்டத்திற்குள் நுழைந்தவர் மீது துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்

குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து சிகிச்சைக்காக குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (03) மாலை இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவின் பிடதெனிய பகுதியில் உள்ள ​தோரபிட்டி தோட்டத்தில் தேங்காய் பறிக்க அனுமதியின்றி தோட்டத்திற்குள் நுழைந்ததற்காக குறித்த நபர் காவலாளியால் சுடப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டை நடத்திய மெதிரிகிரிய பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய சந்தேக நபர், துப்பாக்கிச் சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட போர 12 ரக துப்பாக்கியுடன் குளியாப்பிட்டிய பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த துப்பாக்கிக்காக 2025 ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி உரிமம் வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

நாட்டை முடக்குவதற்கு இதுவரையில் தீர்மானம் இல்லை

வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களை தபால் மூலம் விநியோகிக்க நடவடிக்கை

editor

நாட்டிற்கு வர ஆவலுடன் காத்திருக்கும் 39,000 இலங்கையர்கள்