வணிகம்

தேங்காய்க்கான உயர்ந்தபட்ச சில்லறை விலை நிர்ணயம்

(UTV|COLOMBO)-தேங்காய்கான உயர்ந்தபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு தேங்காயின் உயர்ந்தபட்ச சில்லறை விலை 75 ரூபாவாகும்.

உயர்ந்தபட்ச விலையை விட கூடுதலான விலைக்கு தேங்காயை விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெங்கு சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் கபில யக்கந்தலாவ தெரிவித்துள்ளார்.

நுகர்வோருக்கு தேவையான தேங்காய் நாட்டில் காணப்படுகின்றது. இதனால், கூடுதலான விலைக்கு தேங்காயை கொள்வனவு செய்ய வேண்டிய தேவை கிடையாது.

 

சில வர்த்தகர்கள் நுகர்வோரின் பணத்தை சுரண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள். சில இடங்களில் 100 ரூபாவுக்கு தேங்காய் விற்பனை செய்யப்படுகிறது. இதுபற்றிய அறிக்கையை பெற்றுக் கொள்வதற்காக தெங்கு செய்கை சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

 

கூடுதலான விலைக்கு தேங்காயை கொள்வனவு செய்யும் வாய்ப்பு இதன் மூலம் கிடைக்கிறது. இதற்கமைய, அவர்களுக்கு எதிராக விலைக்கட்டுப்பாட்டுச் சபையின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

மேலும் , கூடுதலான விலைக்கு தேங்காயை விற்பனை செய்வோரை இனங்காணும் வாய்ப்பு இதன் மூலம் கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

INSYS 2017 நிகழ்வில் SLIIT மாணவர்கள் தமது புத்தாக்கமான திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர்

06ம் திகதிக்கு பின்னர் வாகன இறக்குமதிக்காக ஆரம்பிக்கும் கடன் பத்திரங்களுக்கு புதிய வரி முறை

காலாவதியான பேக்கரி உற்பத்தி பொருட்கள் மீட்பு