(UTV | கொழும்பு) – தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் வருமானம் அதிகரித்துள்ளதோடு, அதன் வருமானம் ஆண்டின் முதல் 40 நாட்களில் 52 மில்லியன் என பதிவாகியுள்ளது.
பார்வையாளர்களை கவரும் வகையில் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதுமையான திட்டங்கள் மற்றும் அவர்களுக்குக் கிடைக்கும் மேம்படுத்தப்பட்ட வசதிகள் என்பனவே பார்வையாளர்களின் அதிகளவான வருகைக்கு முக்கியக் காரணம் என அதன் செயல்பாட்டு இயக்குனர் எச்.ஏ.அனோமா பிரியதர்ஷனி தெரிவித்துள்ளார் .
மிருகக்காட்சிசாலையானது தினமும் காலை 8.30 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்களுக்கு திறந்திருக்கும் என்றும், விலங்குகளின் செயல்பாடுகளைப் பார்க்கவும் பறவைகள், மீன்கள், யானைகள் மற்றும் ஒட்டகச்சிவிங்கிகளுக்கு மிருகக்காட்சிசாலையின் மேற்பார்வையில் வழங்கப்படும் உணவை மட்டுமே உணவளிக்க அனுமதிக்கப்படுவதாகவும் இயக்குனர் கூறினார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්