உள்நாடு

தெஹிவளை மிருகக்காட்சிசாலை இடமாற்றம் செய்யப்படுமா ? வெளியான தகவல்

தெஹிவளை தேசிய விலங்கியல் பூங்கா, அறிவு மற்றும் பொழுதுபோக்கை வழங்கும் இடமாக மேலும் தரமுயர்த்தப்படும் எனவும் இப் பூங்காவை வேறொரு இடத்துக்கு எடுத்துச் செல்லும் எண்ணம் இல்லை எனவும் தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய பணிப்பாளர் நாயகம் சந்தன ராஜபக் ஷ தெரிவித்தார்.

நேற்று முன்தினம் (08) தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்ட அவர், ஊழியர்களிடம் உரையாற்றும்போதே இதனை தெரிவித்தார்.

இதன்போது, நாடுகளுடனான விலங்குகள் பரிமாற்றத் திட்டங்களின் கீழ் வெளிநாடுகளிலிருந்து விலங்குகளை இறக்குமதி செய்து மிருகக்காட்சிசாலையை ஒரு கவர்ச்சிகரமான இடமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சந்தன ராஜபக் ஷ மேலும் தெரிவித்தார்.

Related posts

வடமாகாணத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பிரான்ஸ் அரசாங்கம் பூரண ஆதரவு – பிரான்ஸ் தூதுவர்.

உயர் நீதிமன்றத்தின் நடவடிக்கைகளை ஆரம்பிக்க நடவடிக்கை

அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி