நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தின் தெஹியத்தகண்டி பிரதேச சபை மற்றும் கல்முனை மாநகர சபை ஆகிய இரு சபைகளுக்கும் தேர்தல் நடைபெற மாட்டாது என திகாமடுல்ல மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியும், மாவட்ட செயலாளருமான சிந்தக அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.
இம்மாவட்டத்திலுள்ள மொத்தம் 20 சபைகளில் இந்த இரு சபைகளும் தவிர்ந்த ஏனைய 18, சபைகளுக்கும் தேர்தலை நடத்த தெரிவத்தாட்சி அதிகாரி என்ற வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.