உள்நாடு

தெற்கு அதிவேக வீதியில் மண்சரிவு – போக்குவரத்துக்கு பாதிப்பு.

(UTV | கொழும்பு) –

தெற்கு அதிவேக வீதியில் நேற் ஏற்பட்ட மண்சரிவினால் ஏற்பட்ட போக்குவரத்துத் தடை தொடர்வதாகவும் வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
தெற்கு அதிவேக வீதியின் இமதுவ மற்றும் பின்னதுவ பகுதிகளுக்கு உட்பட்ட 102 ஆம் மைல் பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட மண்சரிவால் அந்த வீதியுடனான போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது.

குறித்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்ட பொலிஸ் விஷேட அதிரடிப்படையைச் சேர்ந்த 6 பேர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், குறித்த வீதியூடான போக்குவரத்து தடை தொடர்ந்து காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கடந்த 24 மணி நேரத்தில் 27 பேர் கைது

06 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

மீண்டும் 50 மில்லியன் அமெரிக்க டொலர் கடன்