உள்நாடு

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிப்பன்ன நுழைவாயில் சிறு வெள்ளம்

(UTV | கொழும்பு) – தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிப்பன்ன நுழைவாயில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இதனால் சிறிய ரக வாகனங்கள் செல்வதற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

வெலிபன்ன நுழைவாயிலுக்கு அருகில் இரண்டு இடங்களில் வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இதேவேளை, மாற்று வழிகளை பயன்படுத்துமாறு நெடுஞ்சாலை பராமரிப்பு பிரிவு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

இதன்படி, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கொழும்பு அல்லது காலி நோக்கி பயணிக்க விரும்பும் சாரதிகள் குருந்துகஹாஹட் அல்லது தொடங்கொட நுழைவாயிலை பயன்படுத்துவதற்கு வாய்ப்பு உள்ளது.

Related posts

மற்றுமொரு கொவிட் திரிபு ஏற்படும் அபாயம்

தொலைபேசி இலக்கத்தை வேறொரு வலையமைப்புக்கு மாற்ற சட்ட அனுமதி

தப்பியோடிய சிறைக்கைதிகளை கைது செய்ய விசேட தேடுதல்