வகைப்படுத்தப்படாத

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து

(UDHAYAM, COLOMBO) – தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் போக்குவரத்து நடவடிக்கைகள் அடுத்த வாரத்தில் மீண்டும் வழமை நிலைக்கு திருத்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிவேக நெடுஞ்சாலை பராமரிப்பு மற்றும் நடவடிக்கைகள் பணிப்பாளர் சமன் ஓப்பநாயக்க இது குறித்து தெரிவிக்கையில், தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் போக்குவரத்து நடவடிக்கைகள் எதிர்வரும் வாரத்தில் வழமை நிலைக்குத் திரும்பும் என்றார்.

கொக்மாதுவ என்ற இடத்தில் மண்சரிவினால் வீதியில் மண்மேடு இடிந்து வீழ்ந்தது. இதனால் கொழும்பிலிருந்து மாத்தறைக்கான ஒரு நிரல் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது.

இந்த இடத்தில் மீண்டும் மண்சரிவு ஏற்படாத வகையில் புதிய தொழில்நுட்பத்திற்கு அமைவாக நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அதிவேக நெடுஞ்சாலை பராமரிப்பு மற்றும் நடவடிக்கைகள் பணிப்பாளர் சமன் ஓப்பநாயக்க கூறினார்.

Related posts

எதிர்வரும் நாட்களில் இலங்கையில் உறைபனி

இந்திய பஸ் விபத்தில் 48 பேர் பலி

கூகுள்’ நிறுவனத்துக்கு 7 ஆயிரத்து 600 அமெரிக்க டாலர்கள் அபராதம்