உள்நாடு

தெரணியகலை பிரதேச சபைத் தவிசாளர் கைது

(UTV | தெரணியகலை) – கேகாலை மாவட்ட தெரணியகலை பிரதேச சபைத் தவிசாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்திருந்தார்.

தேசிய நீர்வழங்கல் சபைக்கு சொந்தமான 477 நீர்மாணிகள் திருடப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருடப்பட்ட 98 நீர்மாணிகள், தெரணியகலை பிரதேச சபை தவிசாளரின் பொறுப்பிலிருந்த நிலையில், நேற்று(16) கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

அரச ஊடக நிறுவனங்களுக்கு திறைசேரியில் இருந்து நிதி

மண்சரிவு எச்சரிக்கை

தரம் 6 முதல் 13 வரையிலான கல்வி நடவடிக்கைகள் வழமைக்கு