சூடான செய்திகள் 1

தெமட்டகொட குண்டுவெடிப்பில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர் பாதிய பண்டார ரத்னாயக்கவின் குடும்பத்திற்கு ஜனாதிபதியால் நிதியுதவி வழங்கப்பட்டது

(UTV|COLOMBO) அண்மையில் கொழும்பு தெமட்டகொடயில் இடம்பெற்ற குண்டுவெடிப்பின்போது உயிரிழந்த கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் சேவையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் பாதிய பண்டார ரத்னாயக்கவின் தாயாருக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன 10 இலட்ச ரூபாய் நிதி அன்பளிப்பினை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கி வைத்தார்.

பாதிய பண்டார ரத்னாயக்கவின் தாயாரான கே.ஏ.இனோக்கா ஷிரானி உரிய காசோலையை ஜனாதிபதியிடமிருந்து பெற்றுக்கொண்டதோடு,அவரது குடும்ப உறுப்பினர்களும் இதன்போது வருகை தந்திருந்தனர்.

 

 

 

 

 

Related posts

போத்தலில் அடைக்கப்பட்ட நீரின் தரம் பற்றி ஜனாதிபதி பணிப்புரை

”சம்பள உயர்வு : தோட்டத் தொழிலாளர்களாலும் பொதுமக்களாலும் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது!”

பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை