உலகம்

தென் கொரியாவில் திறக்கப்பட்ட 2 நாட்களில் மூடப்பட்ட பாடசாலைகள்

(UTV|கொழும்பு)- தென் கொரியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளதால், அங்கு திறக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட பாடசாலைகள் இரண்டு நாட்களில் மீண்டும் மூடப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் 56 பேர் புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் இந்த தொற்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பெரும்பாலான புதிய தொற்றுகள் தென் கொரியாவின் மிகப்பெரிய இணைய வணிக நிறுவனமான சேமிப்பு கிடங்கில் ஏற்பட்டுள்ளதுடன், இங்கு பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

புச்சியோன் பகுதியில் திறக்கப்பட்ட 251 பள்ளிகள் கொரோனா தொற்று காரணமாக மீண்டும் மூடப்பட்டுள்ளது.

Related posts

கொரோனா தொற்று : 83 இலட்சத்தை நெருங்குகிறது

சீனாவில் மீளவும் ஊரடங்கு

ஹெலி விபத்தில் 5 பொலிசார் உயிரிழப்பு