உள்நாடு

தென் கடலில் 300 கிலோ போதைப்பொருளுடன் 6 பேர் கைது

(UTV | கொழும்பு) – தெற்கு கடல் பரப்பில், பாரியளவான போதைப்பொருளுடன், பலநாள் படகு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

கடற்படை, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு மற்றும் அரச புலனாய்வு பிரிவு என்பன இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பில், இந்தப் படகு கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த பலநாள் படகில் 300 கிலோகிராம் ஹெரோயினும். 25 கிலோகிராம் ஐஸ் ரக போதைப்பொருளும் உள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

இதன்போது, 6 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

Related posts

இன்றும் 209 பேர் குணமடைந்தனர்

கல்வியமைச்சின் அறிவித்தல்

மருமகனால் தாக்கப்பட்டு மாமனார் உயிரிழப்பு – சாய்ந்தமருதில் சோகம்