வகைப்படுத்தப்படாத

தென் ஆப்பிரிக்காவில் கடத்தப்பட்ட இந்திய வர்த்தகர் 137 நாட்களுக்கு பிறகு விடுதலை

(UTV|COLOMBO)-தென் ஆப்பிரிக்காவில் பிரிடோரியா பகுதியை சேர்ந்தவர் ஒமர்காரிம் (76). இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர் அங்கு பிரபல வர்த்தகராக திகழ்கிறார். இருதய நோயினால் அவதிப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு 3-ந்தேதி பிரிடோரியாவில் உள்ள தனது வர்த்தக நிறுவனத்தில் இருந்து காரில் புறப்பட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் மர்ம நபர்களால் காருடன் கடத்தப்பட்டார்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை பல இடங்களில் தேடி வந்தனர். ஆனால் அவர் குறித்த தகவல் எதுவும் தெரியவில்லை.

இந்த நிலையில் கடத்தப்பட்ட 137 நாட்களுக்கு பின் ஒலிபேன்ட்ஸ் போன்டின் என்ற இடத்தில் வைத்து விடுதலை செய்யப்பட்டார். அவரை கடத்தியவர்கள் யார் என தெரியவில்லை.

ஆனால் அவர் பாதுகாப்புடனும், நலமுடனும் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே அவர் விடுவிக்கப்பட்டதற்கு குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Dayasiri appears before PSC

“There is No Need For me to Apologize” – Ranjan Ramanayake [Video]

பிரித்தானிய – ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்தில் பேச்சுவார்த்தை