விளையாட்டு

தென்னாபிரிக்க அணி 113 ஓட்டங்களினால் வெற்றி…

இலங்கைக்கு எதிராக இரண்டாவது போட்டியில் தென்னாபிரிக்க அணி 113 ஓட்டங்களினால் வெற்றிபெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித் தலைவர் மலிங்க களத்தடுப்பை தெரிவு செய்ய தென்னாபிரிக்க அணி ஆடுகளம் புகுந்து துடுப்பெடுத்தாடி 45.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 251 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

பதிலுக்கு 252 ஓட்டம் என்ற வெற்றியிலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி அடுத்தடுத்த ஆட்டமிழப்பினால் 32.2 ஓவர்களை மாத்திரம் எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 138 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 113 ஓட்டங்களினால் தோல்வியை தழுவியது.

இலங்கை அணி சார்பில் ஓசத பெர்னாண்டோ 31 ஓட்டத்தையும், குசல் மெண்டீஸ் 24 ஓட்டத்தையும், திஸர பெரேரா 23 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றதுடன், ஏனைய வீரர்கள் அனைவரும் துடுப்பாட்டத்தில் சோபிக்க தவறினர்.

இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென்னாபிரக்க அணி 2:0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

பந்து வீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பில் ரபடா 3 விக்கெட்டுக்களையும், அன்ரிச் நொர்டே, லுங்கி நிகிடி மற்றும் இம்ரான் தாகீர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

இவ்விரு அணிகளுக்குமான மூன்றாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 10 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

மகளிருக்கான பளுதூக்குதல் போட்டியில் இந்தியா 2-வது தங்க பதக்கத்தை வென்றது

ஒலிம்பிக்கில் சீனாவுடன் முட்டும் அமெரிக்கா

இந்தியா அணியின் அடுத்த தலைவராக “ரோஹித்”..