வகைப்படுத்தப்படாத

தென்கொரிய வைத்தியசாலையில் தீ – இலங்கையர் எவருக்கும் பாதிப்பில்லை

(UTV|COLOMBO)-தென்கொரிய வைத்தியாசாலையில் இடம்பெற்றுள்ள தீச்சம்பவத்தில் அங்கு பணியாற்றும் இலங்கையர் எவருக்கும் பாதிப்பு ஏற்பட்டதா என்பது தொடர்பில் இதுவரை எந்த தகவலும் இல்லை என்று அங்குள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தில் ஆகக்குறைந்தது 33பேர் உயிரிழந்துள்ளதாகவும் 70 பேருக்கு மேற்பட்டோர் காயங்களுக்கு உள்ளனதாகவும் அவர்களில் 13பேர் கவலைக்கிடம் என்றும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தீயை அணைப்பதில் உலங்குவானூர்திகள் ஈடுபட்டுள்ளன.  அந்நாட்டு நேரப்படி இன்று காலை 7.30 க்கு இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது. தென்கொரியாவின் தலைநகர் சீயோலிருந்து தென்கிழக்கு பக்கமாக 270 கிலோமீற்றருக்கு அப்பால் மிரியாங் என்ற இடத்தில் இந்த சியோங் வைத்தியசாலை அமைந்துள்ளது.

வைத்தியசாலையில் இருந்தோர் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர். சம்பவத்தின்போது 200 பேர் இருந்துள்ளதாக அந்நாட்டு பொலிசார் தெரிவித்துள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

புராதன பொருட்கள் கண்டுபிடிப்பு

සියළු පෙරහැර කටයුතු ඔක්තෝබර් මසට පෙර අවසන් කරන්න තීරණයක්

தான்சானியா நாட்டில் படகு கவிழ்ந்து விபத்தில் 44 பேர் பலி