உலகம்

தென்கொரிய தேர்தலில் ஆளும் கட்சி அமோக வெற்றி

(UTVNEWS | கொழும்பு) –தென்கொரிய தேர்தலில் ஆளும் கட்சியான கொரிய ஜனநாயக கட்சி 163 இடங்களில் அமோக வெற்றி பெற்றுள்ளது.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் தென்கொரியாவில் நடைபெற்ற தேர்தலில் கடந்த 28 ஆண்டுகளில் இல்லாத அளவாக 66 சதவீத வாக்குகள் பதிவாயின.

300 உறுப்பினர்களைக் கொண்ட கொரிய நாடாளுமன்றத்திற்கு 253 தொகுதிகளில் போட்டியிட்ட கொரிய ஜனநாயக கட்சி 163 இடங்களில் அமோக வெற்றி பெற்றுள்ளது.

கொரோனா பரவலுக்கு மத்தியில் தென் கொரியா வெற்றிகரமாக தேர்தலை நடத்திய நிலையில் கொரோனா பரவலை அதிபர் மூன் ஜே இன் கையாண்ட விதமே தேர்தலில் அவரது கட்சியின் அமோக வெற்றிக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

Related posts

பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட நபர் மரணம்

கர்ப்பிணிகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் ஜிகா வைரஸ்

ஒட்சிசன் பற்றாக்குறை : நள்ளிரவில் அடுத்தடுத்து உயிர்கள் பலி