உள்நாடு

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

நேற்று (27) வியாழக்கிழமை சுகாதார அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் 27 பேரை பொலிஸார் கைது செய்தனர். இவர்களில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளரான மதுஷான் சந்திரஜித் உட்பட இருவரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாவத்தை நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (28) உத்தரவிட்டுள்ளது.

அத்தோடு மேலும் கைது செய்யப்பட்ட ஏனைய 25 பேரை பிணையில் விடுதலை செய்யுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளரான மதுஷான் சந்திரஜித் உட்பட இருவரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாவத்தை நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (28) உத்தரவிட்டுள்ளது.

மேலும் கைது செய்யப்பட்ட ஏனைய 25 பேரை பிணையில் விடுதலை செய்யுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளரான மதுஷான் சந்திரஜித் உட்பட இருவரையும் விடுதலை செய்யுமாறு கோரி தென்கிழக்கு பல்கலைக் கழக மாணவர்கள் இன்று மாலை 06.30 மணி முதல் 7.30 மணிவரை பல்கலைக் கழகத்திற்கு முன்பாக கல்முனை – அக்கரைப்பற்று பிரதான வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

-சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்

Related posts

தனக்கு ஆதரவு வழங்காததால்: ரிஷாடிற்கான அபிவிருத்து பணத்தை நிறுத்திய ரணில்

editor

ஜனாதிபதி ரணிலை சந்தித்தார் சமந்தா

வீட்டிலும் முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயமானதாகும்