சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட இறைச்சி கடைகள், இப்தாருக்கு சிற்றுண்டி உற்பத்தி செய்து விற்பனை செய்யும் கடைகள் உட்பட தென்கிழக்கு பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் உள்ள சிற்றுண்டிச்சாலை என்பன இன்று புதன்கிழமை நோன்பு கால உணவுப் பாதுகாப்பின் நிமித்தம் பரிசோதிக்கப்பட்டது.
சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பரிசோதனை மேற்கொண்டு சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாத இரு உணவகங்களுக்கும், தென்கிழக்கு பல்கலைக்கழக பெண்கள் விடுதியிலுள்ள சிற்றுண்டிச்சாலைக்கும் எதிராக, சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
மூன்று நிறுவனத்திற்கும் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தினால் 15000/-, 10000/-, 5000/- என மொத்தமாக 30000/- அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-நூருல் ஹுதா உமர்