உள்நாடு

தென்கிழக்கு இளைஞர் பேரவை ஏற்பாடு செய்த ‘யூத் போரம்- 2024’ நிகழ்வு

அம்பாறை மாவட்ட தென்கிழக்கு இளைஞர் பேரவை ஏற்பாடு செய்த ‘யூத் போரம்- 2024’ நிகழ்வு கல்முனை பிராந்திய ஒருங்கிணைப்பாளர் எல்.எம். சாஜித் அவர்களின் நெறிப்படுத்தலில் மாளிகைக்காடு வாபா றோயலி மண்டபத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் கலந்து கொண்டதுடன் மேலும் விசேட அதிதிகளாக இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாச்சார பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸீல், கிழக்கின் கேடயம் பிரதானியும், கிழக்கு மாகாண அனைத்துப்பள்ளிவாசல்கள் பொதுநிறுவனங்கள் சம்மேளன நிறைவேற்று குழு உறுப்பினருமான எஸ்.எம். சபீஸ், சிரேஷ்ட சட்டத்தரணி ஹபீப் றிபான், கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு பணிப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினரின் வெகுஜன தொடர்பாடல் செயலாளருமான யூ.எல்.என். ஹுதா உமர், அட்டாளைசேனை நலன்புரி அமைப்பின் தலைவர் அதிபர் ஏ.ஜி.அன்வர் நௌஸாத், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர்களான ஏ.ஆர். அமீர், எம்.ஏ. ஹலீலுர் ரஹ்மான், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்யோக செயலாளர் நௌபர் ஏ பாவா, இணைப்பு செயலாளர் சட்டத்தரணி சப்ராஸ் நிலாம் உட்பட தேசிய புகழ்பெற்ற கலைஞர்கள், கல்விமான்கள், ஊடகவியலாளர்கள், பிரமுகர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் சர்வதேச மற்றும் தேசிய அரசியல் போக்குகள், உள்நாட்டு அரசியல் விடயங்கள், சட்ட நுணுக்கங்கள், பொருளாதார மேம்பாட்டு விடயங்கள், சமகால இளைஞர்களின் தொழில் முயற்சிகள், இளைஞர்களின் எதிர்கால திட்டமிடல்கள், சமூக வலைத்தள பயன்பாடுகளும் அதன் நன்மை தீமைகளும் தொடர்பில் கலந்து கொண்ட இளைஞர்கள் அதிதிகளிடம் கேள்விகளை தொடுத்து தெளிவினை பெற்றுக்கொண்டனர். இதன்போது தேசிய புகழ்பெற்ற கலைஞர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

Related posts

நாட்டின் வரி கட்டமைப்பில் மாற்றங்கள் : புதிய வரிகள் அறிமுகம்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே, விளக்கமறியலில்

editor

இன்று முதல் 11 இடங்களில் Rapid Antigen பரிசோதனை