சூடான செய்திகள் 1

தூபியின் மீதேறி புகைப்படம் எடுத்த இளைஞர்களின் விளக்கமறியல் நீடிப்பு

(UTV|COLOMBO) மிஹிந்தலை ரஜமஹா விகாரை பூஜா பூமியில் அமைந்துள்ள புராதன தூபியின் மீதேறி புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் இருவரதும் விளக்கமறியல் எதிர்வரும் 27ஆம் திகதி வரை நீடிக்க அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இன்று(20) உத்தரவு பிறப்பித்துள்ளது.

மூதூர் பிரதேசத்தை சேர்ந்த 20 மற்றும் 18 வயதுடைய குறித்த மாணவர்கள் இருவரும் திஹாரிய பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றில் கல்வி கற்கும் மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பொசொன் நோன்மதி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி

கொழும்பில் மின் விநியோகம் தடை

ஜனாதிபதி தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்கள்