கேளிக்கை

துல்கர் சல்மான் புகழாரம்

(UTV |  சென்னை) – விஜய் ஒரு சூப்பர் ஹீரோ போன்றவர் என்று துல்கர் சல்மான் கூறியுள்ளார்.

ஶ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள படம் ‘குருப்’. இப்படத்தில் ஷோபிதா துலிபலா, இந்திரஜித் சுகுமாரன், ஷைன் டாம் சாக்கோ, ஷன்னி வேய்ன், டொவினோ தாமஸ், ஷிவஜித், பத்மனாபன், சுதீஷ், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலரும் துல்கருடன் நடித்துள்ளனர். துல்கர் சல்மானின் வேஃபேரர் பிலிம்ஸ் மற்றும் எம் ஸ்டார் எண்டெர்டெய்ன்மெண்ட் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன.

1984 முதல் கேரள போலீஸாரால் தேடப்பட்டு வரும் சுகுமாரா குருப் என்பவரின் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படம் நேற்று (நவ.13) திரையரங்குகளில் வெளியானது.

இந்நிலையில் இப்படம் தொடர்பான விளம்பரப் பணிகளில் துல்கர் சல்மான் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் விஜய் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள துல்கர், ”விஜய் ஒரு சூப்பர் ஹீரோ போன்றவர். அவரது நடனத்துக்கு நான் மிகப்பெரிய ரசிகன். ‘மாஸ்டர்’ படத்தில் இடம்பெற்ற ‘வாத்தி கமிங்’ பாடலில் விஜய்யின் நடனத்தைப் பார்க்க ஆச்சர்யமாக இருந்தது” என்று கூறியுள்ளார்.

துல்கர் சல்மான் தற்போது நடன இயக்குநர் பிருந்தா இயக்கிவரும் ‘ஹே சினாமிகா’ என்ற நேரடி தமிழ்ப் படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

Related posts

கிறிஸ்துமஸ் தினத்தை குறிவைக்கும் ‘நாச்சியார்’

மேடையில் இருந்து திடீரென ரசிகர் கூட்டத்தின் மீது பாய்ந்து குதித்த பிரபல நடிகர்!

ஹிட் ஆகும் கார்த்தி – ரஷ்மிகா