உள்நாடு

துறைமுக தொழிற்சங்க நடவடிக்கை இடைநிறுத்தம்!

(UTV | கொழும்பு) –

துறைமுகத்தில் இன்று இடம்பெறவிருந்த தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கம் தீர்மானித்துள்ளது. 2024 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் சம்பள அதிகரிப்பு கோரியதன் அடிப்படையில் இன்று அடையாள தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கம் தீர்மானித்திருந்தது.

எவ்வாறாயினும், தொழிற்சங்க நடவடிக்கைக்கு துறைமுக அதிகார சபையினால் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு காரணமாக, தமது தொழிற்சங்க நடவடிக்கையை இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதம் 9 ஆம் திகதிக்கு பின்னர் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அதன் பொதுச் செயலாளர் திரு.நிரோஷன் கோரகன தெரிவித்தார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் இருந்து நீக்கம்!

ஷானி விவகாரம் – உப பொலிஸ் இன்ஸ்பெக்டருக்கு விளக்கமறியல் [UPDATE]

உயர்தரப் பரீட்சை – இன்று நள்ளிரவுடன் மேலதிக வகுப்புகளுக்கு தடை

editor